ETV Bharat / state

மீண்டும் அதிகரிக்கும் கரோனா; தயார் நிலையில் திருவள்ளூர் மாவட்டம் - thiruvallur collector visit

கரோனாவுக்கு சிகிச்சைக்காக திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 4 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் தெரிவிதுள்ளார்.

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா; தயார் நிலையில் திருவள்ளூர் மாவட்டம்

author img

By

Published : Jun 22, 2022, 10:28 AM IST

திருவள்ளூர்: தமிழ்நாட்டில் குறைந்திருந்த கரோனா பெருந்தொற்று தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. இதற்காக திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அதற்கான முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் இன்று ஆய்வு செய்தார்.

கரோனா தடு்பபூசி செலுத்துவதில் சிறந்த மாவட்டமாக திருவள்ளூர் திகழ்வதாகவும் முதல் தவணை தடுப்பூசியை 95 சதவிதம் பேரும் 2- வது தவணை தடுப்பூசியை 80 சதவிதம் பேர் வரை செலுத்தியுள்ளனர். தற்போது மீண்டும் தொற்று பரவி வருவதால் முன்னெச்சரிக்கை அவசியமாகின்றது. ஆகையால் மூன்றாவது தடுப்பூசியை மக்கள் அந்தந்த பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு சென்று போட்டுக்கொள்ள வேண்டும் என்று ஆட்சியர் தெரிவித்தார்.

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா; தயார் நிலையில் திருவள்ளூர் மாவட்டம்

மேலும் கடந்த ஆறு மாதங்களாக மக்களிடையே முக கவசம் அணியும் பழக்கம் குறைந்து வருகிறது. வாரத்திற்கு 20 நபர்களுக்கு பரவிய தொற்று தற்போது நாளொன்றுக்கு 50 பேர் வரை பரவி வருகிறது. அனைவரும் முக கவசம் அணிய வேண்டும். மேலும் ஏற்கனவே கடைபிடித்த விதிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் என்றார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 203 நபர்களுக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதில் 8 நோயாளிகள் மட்டுமே மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரு நோயாளி மட்டும் ஐசியூ வார்டில் சிகிச்சை பெற்று வருவதாக ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்தார்.

மேலும் திருவள்ளூர் மாவட்டத்தில் கரோனா பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருவதாகவும், 2368 சாதாரண படுக்கை வசதியும், 253 ஐசியு படுக்கை வசதியும் என அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மொத்தம் 4 ஆயிரம் படுக்கை வசதிகள் தயார் நிலையில் இருப்பதாகவும் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி முதல்வர் அரசி ஸ்ரீவத்சன், பிரபுசங்கர், ஜெகதீசன், ராஜ்குமார் மற்றும் மருத்துவர்கள் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க: பொன்னேரி அருகே ஆபத்தான பாதையில் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.