திருவள்ளூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பி.வி.ரமணா, கடம்பத்தூர் ஒன்றியத்திற்கு உள்பட்ட வெங்கத்தூர், கொப்பூர், பாப்பரம்பாக்கம் ஊராட்சிகளில் பரப்புரை மேற்கொண்டார். அதிமுக, பாமக, புரட்சி பாரதம் கட்சி நிர்வாகிகள் பி.வி.ரமணாவிற்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மேலும் பாமக மாநில துணை பொதுச் செயலாளர் பாலயோகி, புரட்சி பாரதம் கட்சியின் மாநில பொருளாளர் தொழுவூர் மாறன், பாஜக மாவட்டத் தலைவர் ராஜ்குமார் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பலரும் இப்பரப்புரையில் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: சந்தேகமிருந்தால் எனக்கு ஓட்டு போடாதீர்கள்!