திருவள்ளூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் 32ஆவது சாலைப் பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு இன்று (ஜன. 29) பத்தாம் நாள் வாகன ஓட்டிகளுக்கு கண் பரிசோதனையும் சிகிச்சை அளிக்கும் முகாமும் நடைபெற்றது.
இம்முகாமை மாவட்ட ஆட்சியர் பொன்னையா, காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் ஆகியோர் தொடங்கிவைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மோகன், போக்குவரத்து ஆய்வாளர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் வாகன ஓட்டிகளுக்கு கண் பரிசோதனை செய்து கொள்வதன் அவசியம் குறித்து எடுத்துரைத்தனர்.
இதில் வாகன ஓட்டிகள் நீண்ட வரிசையில் இருந்து கண் பரிசோதனை செய்துகொண்டனர். பின்னர் மாவட்ட ஆட்சியர் பொன்னையா 32ஆவது சாலை பாதுகாப்பு மாத கண்காட்சி பேருந்தின் செயல்பாடுகளை வட்டார வாகனப் போக்குவரத்து அலுவலக அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
இதையும் படிங்க: வருமானத்திற்கு அதிகமாக சொத்துகள் வாங்கி குவித்த பாண்டியன்!