ETV Bharat / state

திருவள்ளூரில் தொழிலதிபரைக் கொலை செய்த உதவியாளருக்கு ஆயுள்

திருவள்ளூர்: ரியல் எஸ்டேட் அதிபரை கொலை செய்த வழக்கில் அவரது உதவியாளருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருவள்ளூர் மாவட்ட முதன்மை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

real estate in thiruvallur
Tiruvallur business man murder case
author img

By

Published : Mar 10, 2020, 10:55 PM IST

Updated : Mar 10, 2020, 11:34 PM IST

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த மோரை பகுதியைச் சேர்ந்தவர் வீரராகவன். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு உதவியாக பத்மநாபன் என்பவர் பணிபுரிந்து வந்திருக்கிறார்.

இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட பணம் தேவை என ரியல் எஸ்டேட் அதிபர் வீரராகவனிடம், உதவியாளர் பத்மநாபன் தொடர்ந்து கேட்டு வந்துள்ளார். ஆனால், வீரராகவன் பணத்தைத் தர மறுத்துள்ளார். இருப்பினும் தொடர்ந்து பணம் தருமாறு வீட்டுக்குச் சென்று பத்மநாபன் மிரட்டியுள்ளார்.

இந்நிலையில் 2014ஆம் ஆண்டு, நவம்பர் 16ஆம் தேதி மாலை ஆவடி டேங்க் தொழிற்சாலை அருகே வீரராகவன் நடைப்பயிற்சி சென்றுள்ளார். அவருடன் நண்பர் மாரி என்பவரும் சென்றிருந்த நிலையில் அப்போது, இரு சக்கர வாகனத்தில் பட்டாக்கத்தியுடன் பின்னால் வந்த, பத்மநாபன் வீரராகவனை சரமாரியாக வெட்டியுள்ளார்.

இதில் சம்பவ இடத்திலேயே வீரராகவன் உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மகன் பாக்கியராஜ் அளித்தப் புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை நடத்திவந்தனர்.

இந்த வழக்கானது திருவள்ளூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில், நடைபெற்று வந்த நிலையில் வழக்கு விசாரணை முடிந்து நீதிபதி செல்வநாதன் இன்று (10.03.2020) தீர்ப்பு வழங்கினார்.

இதில் வீரராகவனை கொலை செய்த குற்றத்திற்காக, அவரது உதவியாளர் பத்மநாபனுக்கு ஆயுள் தண்டனையும், ரூபாய் ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. பின்னர் பத்மநாபனை காவல் துறையினர் புழல் சிறைக்கு அழைத்துச் சென்றனர்.

திருவள்ளூரில் தொழிலதிபரைக் கொலை செய்த உதவியாளருக்கு ஆயுள்

இதையும் படிங்க: சீட்டு பணம் மோசடி - காவல் ஆணையர் அலுவலகம் முன்பு மூதாட்டி நூதன போராட்டம்

Last Updated : Mar 10, 2020, 11:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.