ETV Bharat / state

திருத்தணி‌ முருகன் கோயிலில் ரூ.71 லட்சத்தைத் தாண்டிய உண்டியல் காணிக்கை! - ரூ.71 லட்சத்தைத் தாண்டிய உண்டியல் காணிக்கை

திருவள்ளூர்: திருத்தணி முருகன் கோயில் உண்டியலில் ரூ. 71 லட்சத்து 38 ஆயிரம் ரூபாயும், 575 கிராம் தங்கமும், 2 ஆயிரத்து 750 கிராம் வெள்ளி நகைகளும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.

உண்டியல் காணிக்கை
உண்டியல் காணிக்கை
author img

By

Published : Nov 4, 2020, 11:33 AM IST

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் உள்ளது அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாகத் திகழும் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில். இங்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசிக்கின்றனர். பிரதி மாதம் ஒரு முறை கோயில் ஊழியர்கள் மூலம் உண்டியல் திறந்து எண்ணப்பட்டு வருகிறது.

tiruttani-murugan-temple
சில்லறைகளை சலிக்கும் காட்சி

கரோனா தாக்கத்தால் தமிழ்நாடு அரசு உத்தரவுப்படி அனைத்துக் கோயில்களும் மூடப்பட்டிருந்தன. ஊரடங்குத் தளர்வுகளுக்குப் பிறகு ஒரு சில தளர்வுகளுடன் கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் மீண்டும் கோயில் திறக்கப்பட்டது.

உண்டியல் காணிக்கை
உண்டியல் காணிக்கை

இந்நிலையில், கோயில் தக்கார் ஜெய்சங்கர், கோயில் அலுவலர்கள் முன்னிலையில் கடந்த 61 நாள்கள் பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணப்பட்டது. இதில் காணிக்கையாக ரொக்கம் ரூபாய் 71 லட்சத்து 38 ஆயிரத்து 278 ரூபாய் பணமும், 575 கிராம் தங்கமும், 2 ஆயிரத்து 750 கிராம் வெள்ளியும்‌ காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்ததாக கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

உண்டியல் காணிக்கை

இதையும் படிங்க:திருத்தணி முருகர் கோவில் - ரூ.72 லட்சம் உண்டியல் காணிக்கை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.