ETV Bharat / state

மாற்று குடியிருப்புகள் வழங்க கோரி மக்கள் போராட்டம்! - மக்கள் போராட்டம்

திருவள்ளூர்: அம்பேத்கர் நகரில் சுமார் 75 குடியிருப்பு வீடுகளை தமிழ்நாடு குடிசை மாற்று வரியம் இடித்துள்ளதால், மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

மக்கள் போராட்டம்
author img

By

Published : Jul 8, 2019, 11:56 PM IST

திருவள்ளூர் மாவட்டம், அம்பேத்கர் நகரில் அதிகமாக ஆதிதிராவிட சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அப்பகுதியில் கடந்த மாதம் 12ஆம் தேதி அரசு தரப்பில் இருந்து எவ்வித முன் அறிவிப்புமின்றி, சுமார் 75 வீடுகளை தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் இடித்து தரைமட்டமாக்கியது. இதனால் வீடுகளை இழந்த மக்கள் குடிநீர், உணவின்றி குழந்தைகளுடன் சாலை ஓரத்தில் இருக்கும் கோயிலில் தங்கி வருவதாகவேதனை தெரிவிக்கின்றனர்.

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த மக்கள் ஆதார் கார்டு, குடும்ப அட்டைகளை வீசி எறிந்து, கண்டன கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து அந்த மக்கள் தெரிவிக்கையில், "வீடுகள் இடிக்கப்பட்டு ஒரு மாத காலம் ஆகியும் எங்களுக்கு மாற்று வீடு ஏற்பாடு செய்ய இதுவரை அரசு முன் வரவில்லை. இதனால் இது குறித்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்துள்ளோம். மேலும் நடவடிக்கைகள் துரிதமாக நடைபெற வேண்டும். இல்லை என்றால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிப்போம்" என்று தெரிவித்தனர்.

மாற்று குடியிருப்புகள் வழங்க கோரி மக்கள் போராட்டம்

Intro:திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் சட்டவிரோதமாக எந்த முன்னறிவிப்பும் மற்றும் அகற்றும் உத்தரவின்றி நாங்கள் குடியிருந்து வந்த வீடுகளை இடித்து பொருட்களை சேதப்படுத்தி அதற்காக உரிய நடவடிக்கையை எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்

Body:திருவள்ளூர் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று சட்டவிரோதமாக எந்த முன்னறிவிப்பும் மற்றும் அகற்றும் உத்தரவின்றி நாங்கள் குடியிருந்து வந்த வீடுகளை இடித்து பொருட்களை சேதப்படுத்தி அதற்காக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்கள் .

அம்பேத்கர் குடியிருப்போர் நலச் சங்கத்தின் தலைவராக பணியாற்றி வருகின்ற ஆதிதிராவிட சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் அம்பேத்கர் நகரில் அதிகமாக வாழ்ந்து வருகின்றன கடந்த 12 6 2019அன்று அந்த பகுதியில் வாழ்ந்த 75 பேரின் வீடுகளை வாழ்வாதாரத்தை சேதப்படுத்தி வீடுகளை இடித்துத் தள்ளி விட்டார்கள் அனைத்து பொருட்களையும் சேதப்படுத்தி விட்டார்கள் அம்பேத்கர் நகர் இரவுப் பாடசாலைகள் இடித்து தள்ளி தரைமட்டமாக்கி விட்டு தற்போது பக்கத்தில் உள்ள கருமாரியம்மன் கோவிலில் தங்கி இருக்கிறோம். எங்களுக்கு ஒரு மாத காலம் ஆகியும் எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லாமல் குடிப்பதற்கு தண்ணீர் இல்லாமல் எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் நாங்கள் வாழ்ந்து வருகிறோம் .

இதுவரை எந்த அரசாங்கமும் எங்களுக்கு தங்கும் வசதி செய்து தரவில்லை எனவே தயவு கூர்ந்து எங்களுக்கு வேற்று இடம் ஏற்படுத்தித் தர வேண்டும் எங்கள் இருப்பிடத்தில் மின்சாரம் குடிநீர் வழங்குமாறு தயவுடன் கேட்டுக் கொள்கிறோம் .தற்போது இதுவரை நீங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நாளை நாங்கள் இதே இடத்தில் தீக்குளிப்போம் என்று அந்த பகுதிவாசிகள் தெரிவித்தன அது மட்டுமில்லாமல் அவர்கள் கையில் கொண்டுவந்த ஆதார் கார்டு மற்றும் குடும்ப அட்டைகளை கீழே வீசி எறிந்து நாளை இதை முழுவதும் தீயிட்டுக் கொளுத்துவோம் என்று என்று முழக்கமிட்டனர் etv செய்திகளுக்காக திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ் பாபு

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.