ETV Bharat / state

திருவள்ளூரில் பட்டப்பகலில் இளைஞர் வெட்டிப் படுகொலை!

author img

By

Published : Jun 9, 2020, 9:53 PM IST

திருவள்ளூர்: இடையன்குளம் பேருந்து நிலையம் அருகே அடையாளம் தெரியாத நபர்கள் இளைஞர் ஒருவரை வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

murder
murder

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு அருகே உள்ள இடையன்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சூரியபிரகாஷ் (24). இவர் இன்று முற்பகல் இடையன் குளத்திலிருந்து பழவேற்காடு பஜாருக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பும் வழியில், இடையன்குளம் பேருந்து நிலையம் அருகே அடையாளம் தெரியாத நபர்கள் இவரைச் சரமாரியாக வெட்டியுள்ளனர்.

இது குறித்து திருப்பாலைவனம் காவல் துறைக்குத் தகவல் அளிக்கப்பட்டது. உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த சூரிய பிரகாஷை காவலர்கள் மீட்டு, அருகில் உள்ள பழவேற்காடு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும்போது, வழியிலேயே அவர் உயிரிழந்தார். பின்னர், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சூரிய பிரகாஷின் உடலை உடற்கூறு பரிசோதனைக்காக, பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

murder
கொலை செய்யப்பட்ட சூரிய பிரகாஷ்

கொலை தொடர்பாக மீஞ்சூர் காவல் துறை ஆய்வாளர் மதியரசன் தலைமையிலான காவலர்கள் தீவிரமாக விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க:மனைவி கண் முன்னே கணவன் அடித்துக்கொலை - காரைக்காலில் பரபரப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.