திருவள்ளூர் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்துவருகிறது. அதேபோல் பூரணமாகக் குணமடைந்து வீடு திரும்புபவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது.
நேற்று திருவள்ளூர் மாவட்டத்தில் 123 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,155ஆக உயர்ந்தது. இதில் 1,117 நபர்கள் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மாவட்டச் சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இன்று நள்ளிரவு முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படவிருப்பதால், பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்றும், அத்தியாவசியத் தேவைகளுக்காக வெளியில் வருபவர்கள் நடந்து சென்றுதான் வாங்க வேண்டும் என்றும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: வங்கி உதவி மேலாளருக்கு கரோனா: நான்கு நாள்களுக்கு வங்கி மூடல்
!