திருவள்ளூர்: தீபாவளி பண்டிகை வரும் 24ஆம் தேதி கொண்டாடப்படும் நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் செய்யப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேற்று (அக்.21) செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், திருவள்ளூர் மாவட்டத்தில் 41 பட்டாசு கடைகளுக்கு விண்ணப்பம் பெறப்பட்டதில், 25 பட்டாசு கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாகவும், மாவட்டம் முழுவதும் 1,028 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
திருட்டு சம்பவங்களை தடுக்கும் விதமாக தீபாவளி பண்டிகையொட்டி, சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள், தங்கள் குடியிருப்பு அருகே உள்ள காவல் நிலையத்திலையோ (அ) காவல்துறை கட்டுபாட்டு எண் 100-க்கு தகவல் அளிக்கலாம் என்றும் (அ) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வாட்ஸ் அப் எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தீ விபத்துகளை விரைந்து தடுக்கும் வகையில் அவசர தேவைக்கு தீயணைப்பு வாகனங்கள் காவல்துறையினர்கள் தயாராக வைக்கப்பட்டு இருப்பதாகவும், வரையறை செய்யப்பட்ட நேரத்தை மீறி சிறுவர்கள் பட்டாசு வெடித்தால் அவர்களுடைய பெற்றோர்களை மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளர்.
இதையும் படிங்க: தீபாவளி: சென்னையிலிருந்து 16,888 சிறப்புப்பேருந்துகள் இயக்கம்