ETV Bharat / state

'தடையை மீறினால் குற்றவியல் தண்டனை பாயும்' - திருவள்ளூர் டிஎஸ்பி கங்காதரன் விடுத்த எச்சரிக்கை

திருவள்ளூர்: கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு தடை செய்யப்பட்ட பகுதியில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து, திருவள்ளூர் மாவட்ட காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் கங்காதரன் பொது மக்களுக்குத் தெளிவாக எடுத்துரைத்தார்.

police
police
author img

By

Published : May 1, 2020, 9:21 PM IST

திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட பத்தியால் பேட்டை, பெரிய எடப்பாளையம் ஆகியப் பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்றால் 6 பேர் பாதிக்கப்பட்டனர். இதில், பத்தியால் பேட்டை பகுதியில் பாதிக்கப்பட்ட மூன்று பேரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இருப்பினும், அப்பகுதியில் கடைபிடிக்கப்பட்டு வரும் தடைகள் இதுவரை அகற்றப்படவில்லை.

இந்நிலையில், இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் கங்காதரன் பொது மக்களுக்கு விளக்கமாக எடுத்துரைத்தார். அதில், "ஒருவர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் என்றால், அப்பகுதியிலிருந்து ஐந்து கிலோ மீட்டர் சுற்றளவிற்குத் தடைகள் ஏற்படுத்தப்பட்டு, அப்பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படுகிறது. குறிப்பாக இப்பகுதிக்கு இரும்புத் தகடுகளால் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது.

இந்தத் தடுப்பைத் தாண்டி வெளியாட்கள் யாரும் உள்ளே நுழையக் கூடாது. உள்ளே இருப்பவர்கள் வெளியில் வரக்கூடாது. அத்தியாவசியத் தேவைக்கு நகராட்சி நிர்வாகம் கொடுத்துள்ள தொலைபேசி எண்ணைத் தொடர்புகொண்டு பேசினால், நீங்கள் கேட்கும் உதவிகள் உடனே செய்யப்படும். மீறி வெளியே வரும் நபர்கள், குற்றவியல் சட்டத்தின் மூலம் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள்" என எச்சரித்தார்.

இதையும் படிங்க: முழு அடைப்பால் உழைப்பாளர்கள் கடும் பாதிப்பு: மம்தா பானர்ஜி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.