ETV Bharat / state

காலால் மிதித்தால், சானடைசரால் கைகளை சுத்தப்படுத்தும் புதிய இயந்திரம்: ! - திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன்

திருவள்ளூர்: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் கரோனா பரவலை தடுக்க காலால் மிதித்தால், சானடைசரால் கைகளை சுத்தப்படுத்தும் புதிய இயந்திரதத்தை காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் தொடங்கிவைத்தார்.

கைகழை சுத்தப்படுத்தும் இயந்திரத்தை தொடங்கிவைத்த காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன்

author img

By

Published : Apr 27, 2020, 8:00 PM IST

Updated : Apr 27, 2020, 8:56 PM IST

திருவள்ளூர் மாவட்டத்தில் கரோனா தொற்று பரவலைத் தடுக்க, மாவட்ட நிர்வாகம் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அதனடிப்படையில் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு நாள்தோறும் புகார் கொடுக்க வழக்கறிஞர்கள், காவல் துறை அனைத்து நிலை அலுவலர்கள் உள்ளிட்ட நூற்றுக்ணக்கான பேர் வந்து செல்வதால் நோய்த்தொற்று பரவாமல் இருக்க, தனியார் தொழிற்சாலை சார்பில் 25 ஆயிரம் ரூபாய் மதிப்பில் புதிய இயந்திரம் ஒன்றை வடிவமைத்து அலுவலக வளாகத்தில் நிறுவியுள்ளனர்.

அந்த இயந்திரத்தின் கீழ்புறத்தில் உள்ள பெடல் போன்ற அமைப்பை காலால் மிதித்தால், கைகளை சுத்தம் செய்யும் சானடைசர் வெளியேறும். அதனைக்கொண்டு கைகளை சுத்தம் செய்து கொண்டு மற்றொரு பெடலை மிதித்து வெளியேறும் தண்ணீர் கொண்டு சுத்தமாக கைகளை கழுவுவம் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் எதனையும் கைகளால் தொடாமல் கைகள் சுத்தமாகும்.

கைகளைச் சுத்தப்படுத்தும் இயந்திரத்தைத் தொடங்கி வைத்த காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன்
இந்த புதிய இயந்திரத்தின் செயல்பாட்டினை திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் தொடங்கி வைத்தார். இனி அலுவலகத்திற்கு வரும் அனைவரும் கைகளை சுத்தப்படுத்திக்கொள்ள இந்த இயந்திரத்தினை பயன்படுத்திக் கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: காவல் ஆய்வாளரின் மனிதநேய செயலுக்கு பொதுமக்கள் பாராட்டு!

Last Updated : Apr 27, 2020, 8:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.