ETV Bharat / state

பரதநாட்டியப்பள்ளி ஆசிரியர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது! - சிறுமிக்கு பாலியல் தொல்லை

திருவள்ளூர்: பரதநாட்டியம் கற்றுக்கொள்ள வந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நடனப்பள்ளி ஆசிரியர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

thiruvallur dance teacher arrested under the pocso act
author img

By

Published : Nov 6, 2019, 10:36 PM IST

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த கோவில் பதாகை, கிறிஸ்து காலனி அன்னை தெரசா மூன்றாவது தெருவைச் சேர்ந்தவர் ரவிசர்மா என்ற பலசுப்பிரமணியம்(53). கடந்த ஆறு ஆண்டுகளாகத் தனது வீட்டில் பரத நாட்டியப்பள்ளி நடத்தி வருகிறார்.

இவர் தனது பள்ளியில் படித்த 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து பரதநாட்டியப்பள்ளியை சிறுமியின் பெற்றோர் உட்பட 50க்கும் மேற்பட்டோர் நேற்றிரவு முற்றுகையிட்டு ரவிசர்மாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

இச்சம்பவமறிந்து வந்த காவலர்கள், பொதுமக்களின் பிடியிலிருந்து ரவிசர்மாவை மீட்டுக் காவல் நிலையம் அழைத்துச்சென்றனர். இந்தச்சூழலில் சிறுமியின் பெற்றோர் அம்பத்தூர் காவல் துணை ஆணையர் ஈஸ்வரனிடம் இன்று காலை புகார் அளித்தனர்.

கைது செய்யப்பட்ட நடனப்பள்ளி ஆசிரியர்

அந்தப் புகார் மனுவை ஆவடி மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பிய அவர், புகாரின் மீது உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

இதன் பின்னர் ரவிசர்மாவிடம் விசாரணை மேற்கொண்ட காவலர்கள், அவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைதுசெய்தனர். பின்னர் ரவிசர்மாவை திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: ஆழ்துளையில் விழும் குழந்தைகளை மீட்கும் புதிய கருவி கண்டுபிடிப்பு!

Intro:ஆவடியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் போக்சோ சட்டத்தில் கைது.Body:ஆவடி அடுத்த கோவில்பதாகை, கிறிஸ்து காலனி, அன்னை தெரசா 3வது தெருவை சேர்ந்தவர் ரவிசர்மா என்ற பாலசுப்பிரமணியம்(53). இவர் வீட்டில் கடந்த 6ஆண்டாக பரத நாட்டிய பள்ளி நடத்தி வருகிறார். இவரது பள்ளியில் இதே பகுதி சுவாதி தெருவை சேர்ந்த 11வயது சிறுமி பரதநாட்டியம் கற்று வருகிறார். இவர், ஆவடி டேங்க் பேக்டரி பகுதியில் உள்ள பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த மாதம் 29ந்தேதி சிறுமி நாட்டியம் கற்க பரதநாட்டிய பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது ரவிவர்மா சிறுமியை தனியாக அழைத்து சென்று பாலியல் தொல்லை செய்துள்ளார். 

   இது குறித்த சம்பவத்தை சிறுமி பெற்றோரிடம் கூறி பரத நாட்டிய பள்ளிக்கு செல்ல மாட்டேன் என அழுதுள்ளளாள். இதனையடுத்து,நேற்று இரவு பரத நாட்டிய பள்ளியை சிறுமியின் பெற்றோர் உட்பட 50க்கு மேற்பட்ட பொதுமக்கள் முற்றுகையிட்டனர். மேலும் ரவிசர்மாவுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பதட்டம், பரப்பரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் பொதுமக்கள் பிடியிலிருந்து ரவிசர்மாவை மீட்டு காவல் நிலையம் கொண்டு சென்றனர். பின்னர், இது குறித்து சிறுமியின் பெற்றோர்  அம்பத்தூர் துணை கமிஷனர் ஈஸ்வரனிடம் இன்று காலை புகார் செய்தனர். 

 இதனை அடுத்து, அவர் புகாரை ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பி விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவு இட்டார். பின்னர்,  இன்ஸ்பெக்டர் ஷோபாராணி தலைமையில் போலீசார் ரவிசர்மாவிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். பின்னர், போலீசார்  போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து ரவிசர்மாவை மாலை கைது செய்தனர். பின்னர், போலீசார் அவரை திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் ஆவடி, கோவில்பாதாகையில் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.