திருவாரூர் மாவட்டம் தபால் நிலையம் முன்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி தலைமையில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களைக் கண்டித்து 50-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது டெல்லியில் துணை இராணுவம் கொண்டு விவசாயிகள் மீது தாக்குதல் நடத்திய மத்திய அரசை கண்டித்தும் வேளாண் சட்டங்கள், மின்சார சட்டத் திருத்தத்தை வாபஸ் பெறவேண்டும், டெல்லியில் போராடும் விவசாயிகள் அமைப்புகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சுமுக தீர்வு காண வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி கண்ட ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், உறுப்பினர்கள் 50-க்கும் மேற்ப்பட்டோர் கலந்துகொண்டனர்.