திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட பட்டரைபெரும்புதூரில் உள்ள ஏரியில் பொதுப்பணித்துறை சார்பாக பனை விதை நடப்பட்டது. பனை விதைகளை ஆட்சியர் மகேஸ்வரி நட்டுவைத்து பணிகளை தொடங்கி வைத்தார்.
தமிழ்நாட்டில் நீர் நிலைகளை புனரமைக்க அந்தந்த பாசன அமைப்பின் விவசாயிகளால் கூட்டாக குடிமராமத்து என்ற பெயரில் சீரமைப்பு பணிகள் செய்து நீர் மேலாண்மை சிறப்பாகவும் செம்மையாகவும் பராமரிக்கப்பட்டு வருகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் தொடங்கி வைக்கப்பட்டு, வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ள இக்குடிமராமத்து திட்டப் பணிகளில் நான்காவது கட்டமாக, அரசு ஆணை வாயிலாக திருவள்ளூர் மாவட்டத்திற்கு 32, 59.34 லட்சம் மதிப்பீட்டுத் தெகைக்கு நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டு 80 ஏரிகளில் அந்தந்த விவசாய சங்கங்கள் வாயிலாக பணிகள் தொடங்கப்பட்டு அனைத்து பணிகளும் முடியும் தருவாயில் உள்ளன.
இப்பணிகள் சுமார் 15,190.45 ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெற உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏரியின் எல்லை பகுதிகளில் சமூக பணிக்குழு அறக்கட்டளை வரியாக விதைகள் உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இதில் முதல்கட்டமாக, 500 விதைகள் தற்போது பட்டரைபெரும்புதூர் ஏரியில் நடப்பட்டன. குடிமராமத்து திட்டத்தின் கீழ் பணி மேற்கொள்ளப்பட்டுள்ள அனைத்து ஏரிகளிலும் சுமார் 15,000 ஆயிரம் பனை விதைகள் சமூக பணிக்குழு அறக்கட்டளை வரியாக நடுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சிகளில் செயற்பொறியாளர் கொசஸ்தலையாறு வடிநிலகோட்டம் சி.பொதுபணித்திலகம், உதவி செயற்பொறியாளர், கார்த்திகேயன், உதவி பொறியாளர்கள் ரமேஷ், சதீஷ்குமார், தன்னார்வ தொண்டு பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: பனைத்தொழிலின் மகத்துவத்தை அடுத்த தலைமுறை அறியுமா?