ETV Bharat / state

திருத்தணி தைப்பூச விழா - பல மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் - thiruthani murugan temple thaipusam festival

திருவள்ளூர்: திருத்தணி முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழாவையொட்டி மலைக் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால், பல மணி நேரம் வரிசையில் காத்திருந்து மூலவரை தரிசித்தனர்.

thaipusam festival
thiruthani murugan temple thaipusam festival
author img

By

Published : Feb 9, 2020, 7:35 PM IST

திருத்தணி முருகன் கோயிலில் நேற்று தைப்பூசத்தை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தங்க கிரீடம், தங்கவேல், வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து காலை 10 மணிக்கும் மாலை 4 மணிக்கும் காவடி மண்டபத்தில் உற்சவர் முருகப் பெருமானுக்கு பால், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம் போன்ற சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.

இரவு 7 மணிக்குக் குதிரை வாகனத்திலும் இரவு 7:30 மணிக்கு தங்கத் தேரிலும் உற்சவர் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் மாட வீதியில் ஒரு முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருமண முகூர்த்த நாள் என்பதால், நேற்று வழக்கத்திற்கு மாறாக 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலைக்கோயிலில் குவிந்தனர்.

இதனால் பொது வழியில் 5 மணி நேரமும் சிறப்பு தரிசனத்தில் குறைந்தபட்சம் ஒன்றரை மணி நேரமும் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் மூலவரைத் தரிசித்தனர்.

திருத்தணி முருகன் கோவிலில் தைப்பூசம் திருவிழா

இதையும் படிங்க: வீனா கைகாட்டி மாரியம்மன் கோயிலில் தைப்பூச திருவிழா

Intro:திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோவிலில் தைப்பூசம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.Body:விரிவான செய்தி மோஜோ வில் உள்ளது.Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.