திருவள்ளூர்: ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக திகழும் திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோயிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று (ஏப்.20) திருத்தணி முருகன் கோயில் நிர்வாகம் சார்பில் தேவர் மண்டபத்தில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோயில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
அதன்படி கடந்த 28 நாள்களில் ஒரு கோடியே 11 லட்சத்து 23 ஆயிரத்து 430 ரூபாய் பணம், 910 கிராம் தங்கம், 12 ஆயிரத்து 503 கிராம் வெள்ளி ஆகியவை உண்டியல் காணிக்கையாக கிடைத்துள்ளதாக கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: விழுப்புரம் ஆஞ்சநேயர் கோயில் தெப்ப உற்சவம்- பக்தர்கள் பரவசம்