இது குறித்து செய்தியாளரிடம் அவர் கூறுகையில், “2019-20 கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகளில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பயின்ற 24 ஆயிரத்து 547 ஆண்கள், 24 ஆயிரத்து 403 பெண்கள் என மொத்தம் 48 ஆயிரத்து 950 மாணாக்கர்களில் 24 ஆயிரத்து 547 ஆண்கள், 24 ஆயிரத்து 403 பெண்கள் என மொத்தம் 48 ஆயிரத்து 950 மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் ஆண்கள் மற்றும் பெண்களின் தேர்ச்சி விழுக்காடு 100 விழுக்காடு ஆக உள்ளது. கடந்த 2019 மார்ச் பொதுத்தேர்வு தேர்ச்சி விழுக்காடு 92.91 ஆகும். அந்தவகையில் இந்தாண்டு, கடந்த ஆண்டு தேர்வைக் காட்டிலும் 7.09 கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாவட்டத்தில் 242 அரசு பள்ளிகளில் பயின்ற 18 ஆயிரத்து 157 மாணாக்கர்களில் 18 ஆயிரத்து 157 மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்று அரசு பள்ளிகளில் 100 விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டில் அரசு பள்ளிகளில் 16 ஆயிரத்து 611 மாணாக்கர்கள் தேர்வு எழுதி 14 ஆயிரத்து 299 மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்று 86.10 விழுக்காடு பெற்றனர் .
கடந்த ஆண்டை விட நடப்பு ஆண்டில் 13.9 விழுக்காடு கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.” என்றார்.
திருத்தணி முருகன் கோயில் தொடர்பாக அவர் கூறுகையில், “திருத்தணி முருகன் கோயிலில் ஆடி கிருத்திகை அறங்காவல் மூலமாக ஆக.12ஆம் தேதி (புதன்கிழமை) நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். பக்தர்கள் யாரும் நேரில் கலந்து கொள்ளக் கூடாது” என்றார்.