ETV Bharat / state

டாஸ்மாக்கில் திருட முடியாததால் ஆத்திரம்: சிசிடிவியை உடைத்துவிட்டு தப்பியோட்டம்!

திருவள்ளூர்: ஜனபன் சத்திரத்தில் உள்ள மதுபானக்கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த நபர், மது பாட்டில்களை கொள்ளையடிக்க முடியாத ஆத்திரத்தில் சிசிடிவி கேமாராவை உடைத்துள்ளார்.

thief broken the cctv camera in thiruvallur tasmac shop
author img

By

Published : Nov 11, 2019, 11:17 PM IST

திருவள்ளூர் மாவட்டம் ஜனபன் சத்திரத்தில் தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் மதுபானக்கடை செயல்பட்டு வருகிறது. வழக்கம்போல், ஊழியர்கள் இன்று காலை கடை திறக்க வந்தபோது மதுபானக்கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

கடையின் கதவைத் திறந்து பார்த்தபோது கண்காணிப்பு கேமரா உள்ளிட்டவை உடைக்கப்பட்டிருப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், லாக்கரில் வைக்கப்பட்டிருந்த பணம் இருக்கிறதா என்பதை பார்த்துள்ளனர். நல்வாய்ப்பாக அதில் வைக்கப்பட்டிருந்த ஐந்து லட்சத்து 29 ஆயிரம் ரூபாயும் கடையிலிருந்த மது பாட்டில்கள் எதுவும் திருடுபோகவில்லை.

திருவள்ளூர் மதுபானக் கடையில் சிசிடிவி கேமாரா உடைப்பு

இதுகுறித்து மதுபானக்கடை ஊழியர்கள் சோழவரம் காவல் நிலையத்திற்கு தகவலளித்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காவலர்கள் அருகிலிருந்த மற்றொரு மதுபானக் கடையின் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு கொள்ளையனைத் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: ஆவடி மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களின் பிச்சையெடுக்கும் போராட்டம்!

Intro:திருவள்ளூர் அருகே டாஸ்மாக் மதுபான கடையின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்து பணம் மற்றும் மதுபானங்களை எடுக்க முடியாததால் ஆத்திரத்தில் கண்காணிப்பு கேமராக்களை உடைத்து பதிவு கருவியை திருடி கொண்டுசென்றனர்

Body:திருவள்ளூர் அருகே டாஸ்மாக் மதுபான கடையின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்து பணம் மற்றும் மதுபானங்களை எடுக்க முடியாததால் ஆத்திரத்தில் கண்காணிப்பு கேமராக்களை உடைத்து பதிவு கருவியை திருடி கொண்டுசென்றனர்

திருவள்ளூர் மாவட்டம் ஜனபன் சரித்திரத்தில்
தமிழக அரசின் டாஸ்மாக் மதுபான கடை செயல்படுகிறது வழக்கம்போல் ஊழியர்கள் இன்று கடை திறக்க வந்த போது மதுபானக்கடையின் பூட்டு உடைக்கப்பட்டு சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து இருந்த நிலையில் கதவைத் திறந்து பார்த்தபோது கண்காணிப்பு கேமரா உள்ளிட்டவை உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக சோழவரம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர் போலீசார் வந்து சோதனை செய்தபோது மதுபான கடையின் பாதுகாப்பு லாக்கரில் வைக்கப்பட்டிருந்த விற்பனை பணம் ஐந்து லட்சத்து 29 ஆயிரம் ரூபாய் அதிலேயே இருப்பது தெரியவந்தது அதிர்ஷ்டவசமாக பணம் மற்றும் மது பாட்டில்கள் கொள்ளை போகாமல் தப்பியுள்ளது அருகிலிருந்த மற்றொரு மதுபான கடையின் கண்காணிப்பு கேமரா பதிவினை கொண்டு கொள்ளையனை சோழவரம் போலீசார் தேடி வருகின்றனர்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.