ETV Bharat / state

டிராக்டர் தலைகீழாகக் கவிழ்ந்து ஓட்டுநர் மரணம்! - டிராக்டர் தலைகீழாகக் கவிழ்ந்து ஓட்டுநர் மரணம்

வேளாண் நிலத்தில் சிக்கிய டிராக்டரை மீட்கச் சென்ற ஓட்டுநர் டிராக்டர் தலைகீழாகக் கவிழ்ந்ததில் அதில் சிக்கி உயிரிழந்தார்.

டிராக்டர் தலைகீழாகக் கவிழ்ந்து ஓட்டுநர் மரணம்

author img

By

Published : Oct 3, 2021, 10:44 AM IST

திருவள்ளூர்: திருவள்ளூர் ஒன்றியம் புன்னப்பாக்கம் ஜே.ஜே. நகர் பகுதியில் பிரபல ஷாலோம் திருச்சபைக்குச் சொந்தமான சுமார் 10 ஏக்கர் கர்த்தரின் தோட்டம் என்ற பெயரில் பண்ணை இடம் உள்ளது.

இந்த இடத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முதியோர் இல்லம் செயல்பட்டுவந்தது. மேலும் இந்த இடத்தில் வேளாண்மை செய்துவந்துள்ளனர். மேலும் இன்று காலை நெற்பயிர் வைப்பதற்காக நிலத்தை சேடை செய்யும் பணியில் பாஸ்டர் தங்கச்சனுக்கு சொந்தமான டிராக்டர் மூலம் புட்லூர் பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் ரூபன் ஈடுபட்டுள்ளார்.

பின்னர் அந்த டிராக்டர் சேடையில் சிக்கிக் கொண்டுள்ளது. அதனால் புன்னப்பாக்கம் வழக்கறிஞர் புஷ்பராஜ் டிராக்டர் உதவியைக் கொண்டு சிக்கியவர்களை மீட்கும் பணிக்காக ஓட்டுநராக ஒதிக்காடு ஊராட்சி எம்ஜிஆர் நகரைச் சார்ந்த முனுசாமி என்பவர் மகன் ஜெகதீஷ் வந்துள்ளார்.

இதனையடுத்து தான் கொண்டுவந்த டிராக்டரை வெளியில் நிறுத்திவிட்டு சேற்றில் சிக்கிக் கொண்ட டிராக்டரை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக டிராக்டர் தலைகீழாகக் கவிழ்ந்தது, இதில் சிக்கிக்கொண்ட ஜெகதீஷ் பலத்த காயமடைந்தார்.

இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் அக்கம்பக்கத்தினர் சுமார் அரை மணி நேரத்திற்கு பின்பு ஜெகதீசை மீட்டு திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

பின்னர் அங்கு ஜெகதீசை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்ததை அடுத்து உடல் உடற்கூராய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டது.

டிராக்டர் தலைகீழாகக் கவிழ்ந்து ஓட்டுநர் மரணம்
டிராக்டர் தலைகீழாகக் கவிழ்ந்து ஓட்டுநர் மரணம்

உயிரிழந்த ஜெகதீஷுக்கு செம்பருத்தி என்ற மனைவியும், மூன்றாம் வகுப்புப் படிக்கும் விக்னேஷ், ஒன்றாம் வகுப்புப் படிக்கும் விஷ்ணு என்ற இரு ஆண் பிள்ளைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஆசிரமம் டு உல்லாசம்: சென்னையைக் கலக்கிய கார் திருடன்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.