ETV Bharat / state

'கரோனா அச்சமின்றி வாக்காளர்கள் வாக்களிக்கலாம்!'

திருவள்ளூர்: வாக்காளர்கள் கரோனா பரவல் குறித்து எந்தவித அச்சமின்றி வாக்களிக்கலாம் எனத் திருவள்ளூர் மாவட்டத் தேர்தல் அலுவலர் பொன்னையா தெரிவித்தார்.

திருவள்ளூர் ஆட்சியர் பொன்னையா
திருவள்ளூர் ஆட்சியர் பொன்னையா
author img

By

Published : Mar 30, 2021, 10:35 PM IST

உலக அளவில் தற்போது கரோனா இரண்டாவது அலை பரவிவரும் நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குச்சாவடிகளில் வைரஸ் (தீநுண்மி) பரவலைத் தடுக்கும் வகையில் திருவள்ளூர் மாவட்டத்தில் பணிபுரியும் மருத்துவ அலுவலர்களுக்குப் பயிற்சி முகாம் மாவட்டத் தேர்தல் அலுவலர் பொன்னையா தலைமையில் மணவாள நகரில் நடைபெற்றது.

பயிற்சியின்போது தன்னார்வலர்கள் செய்ய வேண்டிய பணிகள் குறித்து காணொலி காட்சி ஒளிபரப்புச் செய்யப்பட்டது. இதன்படி தன்னார்வலர்களுக்குப் பயிற்சி அளித்து வாக்களிக்க வரும் அனைத்து வாக்காளர்களுக்கும் இந்த நடைமுறை கடைப்பிடிக்கப்பட வேண்டும் என மாவட்டத் தேர்தல் அலுவலர் தெரிவித்தார்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்டத் தேர்தல் அலுவலர் பொன்னையா, "வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்காளர்கள் எவ்வித அச்சமும் இன்று வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் இரண்டு தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் மூலம் வாக்களிக்க வரும் வாக்காளர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை, சானிடைசர் பயன்படுத்துதல் ஆகிய பணிகளை மேற்கொள்வார்கள்.

மேலும் வாக்களிக்க ஏதுவாக ஒவ்வொரு வாக்காளனுக்கும் கையுறை வழங்கப்படும். வாக்களிக்க வரும் வாக்காளர்களுக்கு காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் அவர்களை மீண்டும் பரிசோதனை செய்து அவர்கள் வாக்களிக்க மாலையில் தனியாக நேரம் ஒதுக்கப்படும்.

மேலும் வாக்குப்பதிவு முடிந்தவுடன் அந்தக் கையுறை, கழிவுகளை முறையாகத் தன்னார்வலர்களே அப்புறப்படுத்துவார்கள். ஆகையால் வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்கலாம்" என்று தெரிவித்தார்.

மேலும் கடம்பத்தூர் அம்பேத்கர் நகரில் பட்டா வழங்காததால் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்திருப்பது குறித்து கேட்டதற்கு, அதற்கான தற்போதைய நிலை குறித்து சம்பந்தப்பட்ட கிராம வாக்காளர்களுக்கு எடுத்துச் சொல்லி தேர்தலில் வாக்களிக்க வலியுறுத்தியதாக மாவட்டத் தேர்தல் அலுவலர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: சைக்கிளில் சென்று வாக்குச் சேகரித்த சிட்லபாக்கம் ராஜேந்திரன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.