ETV Bharat / state

வியாபாரிகளிடம் அடாவடியாக நடந்துகொள்ளும் காவல்துறை -பொதுமக்கள் குற்றச்சாட்டு - திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

திருவள்ளூர்: அரசின் உத்தரவை மீறி திருவள்ளூர் மாவட்ட காவல்துறையினர் அடாவடியாக காலை முதலே கடைகளை மூட வைத்ததால் வியாபாரிகளும் பொதுமக்களும் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

thiruvallur
thiruvallur
author img

By

Published : Apr 6, 2020, 3:40 PM IST

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை அத்தியாவசிய பொருள்களான மளிகை, காய்கறிக் கடைகள் விற்பனை செய்ய அனுமதி அளித்தது.

தற்போது, கரோனா வைரஸ் பரவல் அதிகரித்திருப்பதை தொடர்ந்து கடைகளில் விற்கும் நேரத்தை இரண்டு மணியிலிருந்து ஒரு மணியாக குறைத்துள்ளது. இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர் நகராட்சி நிர்வாகமும், காவல்துறையினரும் இணைந்து அடாவடியாக வியாபாரிகளை மிரட்டி முழுமையாக கடை திறக்க விடாமல் மூட வைத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அத்தியாவசியத் தேவைகளுக்காக நகரங்களிலிருந்து வரும் சிறு வியாபாரிகள், கிராம மக்கள் மீது ஹெல்மெட் வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளைப் பதிவுசெய்து அவர்களது வாகனங்களையும் பறிமுதல் செய்து வருவதாகக் கூறப்படுகிறது. அதேபோன்று நகராட்சி நிர்வாகமும் அடாவடித்தனமாக நடந்துகொள்வது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்ட 21 பேர் தனிமைப்படுத்திக் கொள்ள உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.