ETV Bharat / state

மழைநீர் வெளியேறுவதில் வந்த சண்டை; அரிவாள் வெட்டில் முடிந்தது! - திருவள்ளூர் பாதிரிவேடு காவல்துறை

திருவள்ளூர்: மாதர்பாக்கம் அருகே இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் இருவருக்கு அரிவாள் வெட்டு, ஒருவர் கைது மேலும், இருவருக்கு காவல்துறையினர் வலை வீச்சு.

சென்னை ஸ்டான்லி மருத்துவமனை
சென்னை ஸ்டான்லி மருத்துவமனை
author img

By

Published : Jan 10, 2021, 7:34 PM IST

திருவள்ளூர் மாவட்டம் மாதர்பாக்கம் அடுத்த N.M கண்டிகை மேட்டு தெருவைச் சேர்ந்தவர் தாட்சாயினி வயது 35 இவரது வீட்டின் அருகே வசிப்பவர் ஜெயந்தி (வயது 34). தாட்சாயணிக்கும் ஜெயந்திக்கும் வீட்டு வாசலில் மழைநீர் வெளியேறுவது குறித்து அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது பெய்த பருவ மழையால் தாட்சாயணி வீட்டில் இருந்து வெளிவரும் மழைநீர் ஜெயந்தி வீட்டின் வழியாக வெளியேறுவதால் மீண்டும் இருவருக்கும் இடையில் நடைபெற்ற வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, வீட்டிலிருந்த ஜெயந்தியின் கணவர் இளையராஜா வயது 39, மகன் யுவன்சங்கர் ராஜா வயது 19 ஆகியோர். தாட்சாயணி அவரது கணவர் ஜான்சன் 45 ஆகியோரை அரிவாளால் வெட்டியதில் வெட்டு காயங்களுடன் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருவள்ளூர் பாதிரிவேடு காவல்துறை
திருவள்ளூர் பாதிரிவேடு காவல்துறை
பின்னர் இதுகுறித்து இளையராஜா, ஜெயந்தி, யுவன்சங்கர் ராஜா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்த பாதிரிவேடு காவல்துறையினர் இளையராஜாவை கும்மிடிப்பூண்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பொன்னேரி கிளை சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவான இளையராஜாவின் மனைவி ஜெயந்தி மற்றும் மகன் யுவன் சங்கர் ராஜா ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: 'பறவைக் காய்ச்சல் பரவுவதற்கு வலசை பறவைகளும் காரணம்' - ஐசிஎம்ஆரின் ஓய்வு பெற்ற மூத்த விஞ்ஞானி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.