மத்திய அரசின் திட்டமான தூய்மை இந்தியா திட்டத்தை வலியுறுத்தும் வகையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தூய்மைப்படுத்தும் பணியை மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தொடங்கிவைத்தார்.
மாவட்டத்தில் உள்ள நகராட்சி பேரூராட்சி மற்றும் ஊராட்சி அலுவலகங்கள் அந்தந்த பகுதி அலுவலர்கள் மூலம் தூய்மைப்படுத்தும் பணி நடைபெறும் என மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.
தூய்மைப் பணியாளர்கள் மூலம் முதற்கட்டமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தூய்மைப்படுத்தும் பணியை தொடங்க இருப்பதாகவும் அதே போல் மாவட்டத்திலுள்ள ஆவடி மாநகராட்சி மற்றும் திருவள்ளூர், திருத்தணி, திருவேற்காடு, பூவிருந்தவல்லி நகராட்சிகள் மற்றும் 14 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும், 526 கிராம ஊராட்சி அலுவலகங்களிலும் தூய்மைப்படுத்தும் பணியை அந்தந்த பகுதி அலுவலர்கள் மூலம் மேற்கொள்ள இருப்பதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
அதேபோல் வீட்டையும் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: