திருவள்ளூர்: திருத்தணி அடுத்த அத்திமாஞ்சேரி பேட்டை சேர்ந்த மணிபாரதி (38), காஷ்மீரில் சி.ஆர்.பி.எப் (துணை ராணுவ படை) வீரராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று (ஏப்.19) 11 துணை ராணுவப் படை வீரர்கள் பாதுகாப்பு பணிக்காக ராணுவ லாரியில் சென்றுள்ளனர்.
அப்போது எதிர்தசையில் சென்ற லாரி துணை ராணுவ படையினர் சென்ற லாரி மீது வேகமாக மோதியுள்ளது. அதில் பயணித்த 11 வீரர்களும் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் அங்குள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வந்தனர். இருப்பினும் திருவள்ளூர் மாவட்டம் அத்திமாஞ்சேரிபேட்டை சேர்ந்த மணிபாரதி சிகிச்சை பலனின்றி வீரமரணம் அடைந்தார்.
அவருக்கு பாரதி (35) என்ற மனைவியும், பரணி (11) என்ற மகன் மற்றும் தர்ஷினி (9) என்ற மகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. நாட்டின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டருந்த சிஆர்பிஎப் வீரர் வீர மரணம் அடைந்த சம்பவம் அத்திமாஞ்சேரி பேட்டை கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பிறந்தநாள் கொண்டாட்டத்திற்குச்சென்ற புது மாப்பிள்ளை வெட்டி கொலை; 5 பேர் கைது