ETV Bharat / state

‘சமஸ்கிருதத்தை விட தமிழ் தொன்மையானது’ - கே.பாண்டியராஜன்

திருவள்ளூர்: சமஸ்கிருத மொழியை விட தமிழ் மொழி தொன்மையான மொழி என்று தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

maf
author img

By

Published : Jul 27, 2019, 1:24 PM IST

திருவள்ளூர் மாவட்டம் பருத்திப்பட்டு ஏரியில் அப்துல்கலாம் நினைவு நாளை முன்னிட்டு ஈஷா பசுமை கரங்கள், பசுமை கலாம், மாஃபா அறக்கட்டளை சார்பில் கல்லூரி மாணவர்கள் மரக்கன்றுகளை நட்டு வருகின்றனர். இதனை தொடங்கிவைத்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கே.பாண்டியராஜன், '12ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் தமிழ்மொழியை விட சமஸ்கிருத மொழி பழமையான மொழி என்று இடம்பெற்றுள்ள தகவல் தவறானது. தமிழ் தொன்மையான மொழி என பிரதமர் மோடியே கூறியுள்ளார். திருவள்ளூர் அருகே அதிரம்பாக்கத்தில் 3,75,000 ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.

அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி

இது போன்ற சான்றுகள் உள்ள நிலையில் தமிழ் வெறும் 2,300 ஆண்டுகள் மட்டுமே பழமையானது என கூறமுடியாது. 12ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் தவறான தகவல் இடம்பெற்றுள்ளது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும். தமிழை இழிவுப்படுத்தும் எண்ணம் தமிழக அரசுக்கு கிடையாது’ என்று தெரிவித்துள்ளார்.

விழாவில் பங்கேற்ற அமைச்சர் பாண்டியராஜன், விவேக்

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் விவேக், 'தமிழ்நாட்டில் ஏற்பட்ட வறட்சி, மக்களுக்கு நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும் என்ற மிகப்பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. இதனை பயன்படுத்தி மழை நீரை, நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும். இதில் மாணவர்களும், இளைஞர்களும் ஈடுபட்டால்தான் தமிழ்நாடு பசுமையாக மாறும். கத்தி, அரிவாள் ஏந்தும் மாணவர்கள் அதனை மரம் வளர்க்கவும், நீர்நிலைகளை பாதுக்காக்கவும் பயன்படுத்த வேண்டும்' என்று கோரிக்கை வைத்தார்.

நடிகர் விவேக் பேட்டி

Intro:சமஸ்கிருத மொழியை விட தமிழ் மொழி பழமையான மொழி என்று அமைச்சர் பாண்டியராஜன் ஆவடியில் பேட்டியளித்துள்ளார்.

Body: ,பருத்திப்பட்டு ஏரியல் 1000 மரக்கன்றுகள் நடும் விழாவை அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன் நடிகர் விவேக்கும் துவக்கி வைத்தனர்.
அப்துல்கலாம் நினைவு நாளை முன்னிட்டு ஈஷா பசுமை கரங்கள்,பசுமை கலாம், மாஃபா அறக்கட்டளை சார்பில் கல்லூரி மாணவர்கள் மரக்கன்றுகளை நட்டு வருகின்றனர்.இதனை துவக்கி வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
12 ஆம் வகுப்பு பாடதிட்டத்தில் தமிழ்மொழியை விட சமஸ்கிருத மொழி பழமையான மொழி என்று இடம்பெற்றுள்ள தகவல் தவறானது. தமிழ் தொன்மையான மொழி என பிரதமரே கூறியுள்ளார். திருவள்ளூர் அருகே அதிரம்பாக்கத்தில் 3 லட்சம் 75 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்கள் வாழ்ந்து இருகிறார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.இது போன்ற சான்றுகள் உள்ள நிலையில் தமிழ் வெறும் 2300 ஆண்டுகள் மட்டுமே பழமையானது என கூறமுடியாது. 12 ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் தவறான தகவல் இடம்பெற்றுள்ளது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும். தமிழை இழிப்படுத்தும் எண்ணம் தமிழக அரசுக்கு கிடையாது என்று அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
மேலும் சிலை கடத்தல் வழக்கில் எந்த அமைச்சருக்கும் தொடர்பில்லை என அமைச்சர் பாண்டியராஜன் விளக்கம் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த
நடிகர் விவேக் தமிழத்தில் ஏற்பட்ட வரட்சி மக்களுக்கு நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும் என்ற மிகப்பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.இதனை பயன்படுத்தி
மழை நீரை பாதுக்காக்க வேண்டும்,நீர்நிலைகளை பாதுக்காக்க வேண்டும் இதில் மாணவர்களும்,இளைஞர்களும் ஈடுபட்டால் தான் புரட்சியாக மாறி தமிழகம் பசுமையாக தமிழ்நாடாக மாறும் என்றார் மேலும் கத்தி,அரிவாள் ஏந்தும் மாணவர்கள் அதனை மரம் வளர்க்கவும், நீர்நிலைகளை பாதுக்காக்கவும் பயன்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.