வேலூர் மாவட்டம் ஷேம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ரோகிணி என்பவர் தற்போது திருவள்ளூரை அடுத்த பூங்கா நகரில் வசித்துவருகிறார். இவர் அதே பகுதியில் இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் கடை நடத்திவரும் வதட்டூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபு என்பவரிடம், தான் ஒரு காவல் உதவி ஆய்வாளர் என்று கூறியுள்ளார்.
மேலும் இரண்டு லட்சம் ரூபாய் கொடுத்தால் காவல் துறையில் வேலை வாங்கித்தருவதாகக் கூறி பிரபுவிடம் பணத்தைப் பெற்றுள்ளார். ஆனால் ஒரு வருடத்திற்கு மேலாகியும் வேலை வாங்கித் தராமல் இழுத்தடித்ததால், சந்தேகமடைந்த பிரபு பணத்தைத் திருப்பித் தரும்படி கேட்டதற்கு, ரோகிணி தர மறுத்துள்ளார்.
இதுகுறித்து பிரபு திருவள்ளூர் தாலுக்கா காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். காவல் துறையினரின் விசாரணையில் ரோகிணி காவல் உதவி ஆய்வாளர் என்று பொய் கூறி பண மோசடி செய்தது தெரியவந்தது. பின்னர் காவல்துறையினர் ரோகிணியைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.
இதையும் படிங்க:
வேலை வாங்கித்தருவதாகக் கூறி ரூ.1.50 லட்சம் மோசடி செய்த நபர் கைது