விஜயதசமி திருநாளில் பெற்றோர் தங்களது பிள்ளைகளை பள்ளியில் சேர்ப்பது வழக்கம். விஜயதசமி நாளில் கல்வியைத் தொடங்கினால் குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கையால் அதிக அளவில் குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்கும் நிகழ்வு திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்றது.
அரசுப் பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடைபெற்றது, அப்போது மாணவர்கள் அரிசியில் அகரம் எழுதி தங்களது கல்வியைத் தொடங்கினர். திருவள்ளூர் மாவட்டம் புதுவாயல் அருகே உள்ள டி.ஜே.எஸ். மெட்ரிக் பள்ளி, டி.ஜே.எஸ். மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) பள்ளியில் நவராத்திரி இறுதி நாளான இன்று பள்ளி மாணவர்கள் தாங்கள் கொண்டுவந்த கொலு பொம்மைகளை வைத்து மத நல்லிணக்கத்தையும் ஊட்டச்சத்து உணவின் அவசியம் குறித்தும் அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கொலுவை அமைத்திருந்தனர்.
இதில் பெற்றோர், பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். அதன்பின்னர் புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு பரிசுப் பொருள்களும் புத்தகப்பைகளை வழங்கினர்.
இதையும் படிங்க:'அ.. ஆ.. எழுதப் பழகிய குழந்தைகள்' - இது விஜயதசமி கொண்டாட்டம்!