ETV Bharat / state

பூண்டி ஏரியில் மாநில பேரிடர் மேலாண்மை இயக்குநர் ஆய்வு!

வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கையாக சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமான பூண்டி ஏரியில் இருந்து கொசஸ்தலை ஆற்றில் வெளியேற்றப்படும் உபரி நீர், கரையின் உறுதி தன்மை, நீர் இருப்பு குறித்து மாநில பேரிடர் மேலாண்மை இயக்குநர் சுப்பையன் பொதுப்பணித்துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

c
c
author img

By

Published : Oct 28, 2021, 3:44 PM IST

திருவள்ளூர்: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியிருக்கும் நிலையில், அனைத்து மாவட்டங்களிலும் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க தமிழ்நாடு முதலமைச்சர் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதனையடுத்து தமிழ்நாடு முழுவதும் பல்வேறு கட்ட வெள்ள தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டத்தில் பருவமழை காலத்தில் மக்களுக்கு பெரிய அளவில் சேதம் ஏற்படாமல் இருக்க அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

"இதனை பேரிடர் மேலாண்மை இயக்குநர் சுப்பையன் ஆய்வு மேற்கொண்டார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த சுப்பையன் , சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமான பூண்டி ஏரி, கொசஸ்தலை ஆறு, ஆரணி ஆறு, உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் பாதிப்புக்குள்ளாகும் இடங்கள் கண்டறியப்பட்டு அந்த இடங்கள் மட்டும் அல்லாமல் கரையோர அனைத்து பகுதிகளிலும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

பொதுப்பணித் துறை மூலம் 91 ஆயிரம் மணல் மூட்டைகள் தயார் நிலையில் உள்ளது. ஆறுகளில் தூர்வாரும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 950 கிலோ மீட்டர் தூரம்வரை நீர்நிலை கால்வாய்கள் தூர்வாரி சுத்தம் செய்யப்பட்டு மழை நீர் தேங்காதவாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாநில பேரிடர் மேலாண்மை இயக்குநர்

அதே போல் புயல் மையங்கள், நிவாரண மையங்கள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வண்ணம் அனைத்து முன்னேற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது.

அனைத்து நீர்தேக்கங்களும் 80 விழுக்காடு நிரம்பியுள்ளது. அவற்றை 24 மணி நேரமும் கண்காணிக்க பொதுப்பணித்துறை அலுவலர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை.

தாழ்வான பகுதிகளில் இருக்கும் மக்கள் உதவிக்கு 1070, 1707 என்ற எண் மூலம் கொள்ளலாம். ஒரு சில தண்ணீர் தேங்கும் இடங்களில் தண்ணீரை வெளியேற்ற 128 மின் மோட்டார்கள் தயார் நிலையில் உள்ளது. பருவமழை முடிந்த பிறகும் பல கோடி செலவில் கரைகளை தூர்வாரி பலப்படுத்தும் பணிகளுக்கான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது" என்றார்.

இந்த ஆய்வின் போது திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், பொதுப்பணித்துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: செம்பரம்பாக்கம் ஏரியில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.