சென்னை மக்களின் நீர் ஆதாரமாக விளங்கக்கூடிய நீர்நிலைகள் வறண்டு காணப்படுகின்றன. இதற்கு பருவமழை சரிவர பெய்யாததும், கோடை வெயில் வாட்டி வதைப்பதும்தான் காரணம். இந்நிலையில், மழைபெய்ய வேண்டி தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் கோயில்களில் யாகம், சிறப்பு பூஜைகள் செய்ய உத்தரவிட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து மிகவும் பிரசித்திப்பெற்ற கோயில்களில் ஒன்றான மாங்காடு காமாட்சி அம்மன் கோயிலில் மழை வேண்டி கோயில் வளாகத்தில் யாகம் வளர்க்கப்பட்டது.
இதில் வேத விற்பன்னர்களை மந்திரங்கள் முழங்க வருண சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இந்த பூஜையில் கோயிலுக்கு வருகை தந்த பக்தர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு மழை வேண்டி பிரார்த்தனை செய்தனர்.