முருகனின் ஐந்தாம் படைவீடாக போற்றப்படும் திருத்தணி அருள்மிகு சுப்ரமணியசுவாமி கோயில், கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக மார்ச் 21ஆம் தேதி முதல் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், சிறப்பு பெற்ற ஆடி கிருத்திகை தெப்பத் திருவிழா ரத்து செய்யப்பட்டது.
ஆடி கிருத்திகையை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் செய்யப்பட்டு, தங்க, வைர நகைகள் அணிவிக்கப்பட்டன. பக்தர்கள் தெப்பத் திருவிழாவை திருக்கோயில் இணையதள தொலைக்காட்சி மூலம் நேரலையில் காண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பக்தர்கள் காவடியுடன் மலைக்கோயிலுக்கு வருவதை தடுக்கும் வகையில் மலைக்கோயிலை சுற்றி நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், உள்ளூர் பக்தர்கள் ஒரு சிலர் மட்டும் சரவண பொய்கை குளம் அருகில் முதல் படியில் காவடி பிடித்து முருகப்பெருமானை வணங்கிச் சென்றனர்.