திருவள்ளூர் மாவட்டம், செவ்வாப்பேட்டை ரயில் நிலையம் அருகே பாபு என்பவர் டிபன் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் மளமளவென அருகிலிருந்த பழக்கடை, மீன்கடை உள்ளிட்ட ஏழு கடைகளில் தீ பரவியது.
இதுகுறித்து தகவலறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் மற்றும் தீயணைப்புத் துறையினர் இரண்டு மணிநேர போராட்டத்திற்குப் பின் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: அண்ணா மேம்பாலத்தில் பாமாயில் ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்து விபத்து!