திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அடுத்த ஏனாதி மேல்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ், தனியார் நிறுவனத்தில் காவலாளியாகப் பணிபுரிகிறார். இவர் நேற்று முந்தினம் (அக்டோபர் 6) இரவு வழக்கம்போல் வீட்டைப் பூட்டிவிட்டு தனது குடும்பத்தினருடன் மாடியில் உறங்கியுள்ளார்.
இந்நிலையில் காலை எழுந்துவந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைந்திருப்பதைக் கண்டு, உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பிலான நகை, பணம் கொள்ளைபோனதைக் கண்டு அதிச்சியடைந்துள்ளார்.
தேடுதல் வேட்டை
பின்னர் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த கும்மிடிப்பூண்டி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது இதேபோல் அருகிலுள்ள தாரா என்பவரின் வீட்டில் பூட்டை உடைத்து வீட்டிலிருந்து மூன்றாயிரம் ரொக்கம கொள்ளை போயிருப்பது தெரியவந்தது. மேலும் அருகில் உள்ள தெருவில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட அடையாளம் தெரியாத நபர்கள் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு, அவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
மேலும் அவ்வப்போது நடைபெறும் தொடர் கொள்ளையைத் தடுக்க காவல் துறையினர் ரோந்துப் பணிகள் மேற்கொள்ள வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: டிஜிபி அலுவலகம் முன்பு குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற நபரால் பரபரப்பு