திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் ஜோதிநகர் பன்னிரெண்டாவது தெருவில் வசித்து வரும் கிஷோர் குமார், மணிகண்டன் ஆகியோரை நள்ளிரவில் அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் வீடு புகுந்து அரிவாளால் வெட்டிவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.
இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
அதனடிப்படையில், செங்குன்றம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, அவர்களை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
கடந்த சில நாள்களுக்கு முன்பு, இதே பகுதியில் கணேசன் என்பவர் வெட்டப்பட்ட சம்பவத்தின் முன்விரோதம் காரணமாக, இவர்கள் தாக்கப்பட்டுள்ளதாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து செங்குன்றம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: இளம்பெண்ணை ஏமாற்றிய கட்டடத் தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை!