திருவள்ளூர் மாவட்டத்தில் மாம்பழ வாகனத்தில் மறைத்து வைத்து மது பாட்டில்கள் கடத்தப்படுவதாக பொன்னேரி மதுவிலக்கு காவல் ஆய்வாளர் கீதாலட்சுமிக்கு தகவல் கிடைத்தது.
இத்தகவலின் பேரில் கீதாலட்சுமி தலைமையில் உதவி ஆய்வாளர் குமார் உள்ளிட்ட காவலர்கள் மீஞ்சூர் ரயில்வே கேட் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது மாம்பழம் ஏற்றிவந்த சிறிய சரக்கு வாகனத்தை சோதனையிட்டனர்.
அப்போது மாம்பழத்திற்குகீழ் மறைத்து கொண்டு செல்லப்பட்ட இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பு கொண்ட 20 அட்டைப்பெட்டி சரக்கு உள்ள 960 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கடத்தலில் ஈடுபட்ட சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த முருகன், ஐசக், நாகராஜ் ஆகியோரைக் கைது செய்து, சரக்கு வாகனத்தை பறிமுதல்செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இது குறித்து பொன்னேரி மதுவிலக்கு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.