திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த இந்திரா நகரில் மறைந்த நாம் தமிழர் கட்சியின் திருவள்ளூர் மத்திய மாவட்ட தலைவர் ச.ல. முணியாண்டி மறைவிற்கு நேரில் அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், நீட் தேர்வில் ஏமாற்று வேலைகள் நடைபெறும் என்பதால் தான் ஆரம்பத்தில் இருந்தே எதிர்க்கிறோம்.
தேர்வெழுதிய எண்ணிக்கையை விட தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகம் என வெளியாவதை பார்க்கிறோம். அதிக மருத்துவமனைகளை கொண்ட தமிழ்நாட்டில் ஏமாற்று வேலைகளை புரிந்த வட இந்திய மாணவர்கள் தான் தற்போது கல்வி பயில உள்ளனர். மருத்துவம் படிப்பதற்கு நீட் மதிப்பெண் மட்டுமே தகுதியெனில் 10, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை நீக்கி விடலாமா?
பொதுத்துறை நிறுவனங்களை நிர்வகிக்க முடியாத மத்திய அரசு அண்ணா பல்கலைக்கழகத்தை எடுக்க முயல்வது ஏன்? மாநில உரிமைகளை பறிக்கும் மத்திய அரசு அண்ணா பல்கலைக்கழகத்திலும் கை வைப்பது சேட்டை" என கடுமையாக விமர்சித்தார்.
இதையும் படிங்க: ஒரு அரசுப் பள்ளி மாணவனின் வெற்றி, அனைவரின் வெற்றியாகிவிடுமா? - தங்கம் தென்னரசு