திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி பெத்திக்குப்பம் பகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகனுக்குச் சொந்தமான JFN பாரடைஸ் திருமண மண்டபத்தில், நேற்றிரவு (மே 13) திருமண நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது லிஃப்ட்டின் இரும்பு ரோப் அறுந்து விழுந்து விருந்து உபசரிக்கும் பணிக்காக வந்திருந்த காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பகுதியைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவர் சீத்தல் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி உயிரிழந்தார்.
மேலும் திருவண்ணாமலை மாவட்டம் வெண்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஜெயராமன் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம் கோனேரிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் ஆகியோர் பலத்த காயமடைந்து பொன்னேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் மண்டபத்தின் மேலாளர் திருநாவுக்கரசு, மேற்பார்வையாளர் வெங்கடேசன், லிப்ட் ஆபரேட்டர் கக்கன், மற்றும் மண்டபத்தில் உரிமையாளர் ஜெயப்பிரியா நவீன்குமார் ஆகியோர் மீது கும்மிடிப்பூண்டி சிப்காட் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: குன்றத்தூரில் தோல் தொழிற்சாலை உரிமையாளர் வீட்டில் 100 சவரன் நகை கொள்ளை