மக்களவைத் தேர்தல் அடுத்த மாதம் 18-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையடுத்து அரக்கோணம் தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பவனந்தி மேற்பார்வையில், திருத்தணி சட்டசபை தொகுதியில் மூன்று பறக்கும் படையினர் மூன்று நிலை கண்காணிப்பு குழு அமைத்து தொகுதி முழுவதும் வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை நிலை கண்காணிப்பு குழு அலுவலர் பாலசுப்பிரமணியம், எஸ்ஐ ரவிச்சந்திரன் மற்றும் காவலர்கள் திருத்தணி அருகே வாகன சோதனை நடத்தி வந்தனர்.
அப்போது வேலூரில் இருந்து திருத்தணி நோக்கி வந்த டாட்டா ஏசி வேனை கண்காணிப்பு குழுவினர் நிறுத்தி சோதனை செய்ததில், அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.
இதன் மதிப்பு ஒன்றரை இலட்சம் ரூபாய் இருக்கும் எனவும் அவர்கள் தெரிவித்தனர். மேலும் வேனை ஓட்டி வந்த வேலூரை சேர்ந்த சங்கர் என்பவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.