ETV Bharat / state

எலக்ட்ரானிக் குடோனில் தீ விபத்து: 2 கோடி ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசம்!

author img

By

Published : Nov 10, 2020, 4:33 PM IST

திருவள்ளூர்: திருவேற்காடு அருகே எலக்ட்ரானிக் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 கோடி ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமாயின.

தீ விபத்து ஏற்பட்ட குடோன்
தீ விபத்து ஏற்பட்ட குடோன்

திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு அருகேவுள்ள புலியம்பேடு பகுதியில் ஹையர் எலக்ட்ரானிக் குடோன் செயல்பட்டுவருகிறது. இதில் ஏ.சி, வாஷிங் மெஷின் போன்ற வீட்டு உபயோக பொருள்களுக்கான உதிரி பாகங்கள் தேக்கி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், இன்று (நவ. 10) காலை திடீரென குடோனில் தீப்பற்றத்தொடங்கியதால் அங்கிருந்த பணியாளர்கள் வெளியே ஓட்டம்பிடித்தனர். இதனையடுத்து அருகேவுள்ள தீயணைப்புத் துறையினருக்கும், காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

தகவலின் பேரில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் பாலசுப்ரமணியம் தலைமையில் பூவிருந்தவல்லி, அம்பத்தூர், மதுரவாயல், கோயம்பேடு, ஜெ.ஜெ.நகர், ஆவடி உள்ளிட்ட தீயணைப்பு நிலையங்களிலிருந்து 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன.

பின்னர், பல மணி நேரம் போராடிய தீயணைப்பு வீரர்கள் தீயை ஒருவழியாக கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்தத் தீ விபத்தில் 2 கோடி ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமாயின.

தீ விபத்து ஏற்பட்ட குடோன்

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், குடோனிலிருந்த கேஸ் நிரம்பிய கம்ரைசர் வெடித்து சிதறியதால் இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. தொடர்ந்து, இது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: மருத்துவமனையில் தீ விபத்து: பெண் குழந்தை உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.