ETV Bharat / state

பாத்திரக்கடையில் கொள்ளை: சிசிடிவியில் சிக்கிய கொள்ளையன்! - குற்ற செய்திகள்

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அருகே பிரபல பாத்திரக் கடையில் பொருள்கள் திருடு போனதால் சிசிடிவி பதிவுகளை வைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The robber caught on CCTV
சிசிடிவியில் சிக்கிய கொள்ளையன்
author img

By

Published : Dec 6, 2020, 8:46 PM IST

கும்மிடிப்பூண்டி அருகே சாமிரெட்டி கண்டிகையில் ஆர்விஎஸ் டிரேடர்ஸ் என்னும் பாத்திரக்கடை இயங்கி வருகிறது.

இதன் உரிமையாளரான ரவிச்சந்திரன் நேற்று(டிச.5) இரவு 9:00 மணி அளவில் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்ற நிலையில் மிண்டும் இன்று (டிச.6) காலை 7:40 மணி அளவில் கடையை திறக்க வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் உள்ளே சென்று ரவிச்சந்திரன் பார்த்தபோது, கல்லாப்பெட்டி உடைக்கப்பட்டிருந்ததும், அதில் வைத்திருந்த 43,000 ரூபாய் பணம், சில பொருள்கள் திருடு போனதையும் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

அதன்பிறகு கும்மிடிப்பூண்டி நிலையத்துக்கு தகவல் அளித்ததன் பேரில் அங்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சிசிடிவி பதிவுகளை சோதனை செய்ததில் இரவு 2.40 மணி அளவில் இருசக்கர வாகனத்தில அடையாளம் தெரியாத நபர் கடையை உடைத்து பொருள்களை கொள்ளை அடிக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

சிசிடிவியில் சிக்கிய கொள்ளையன்

இதனைத்தொடர்ந்து சிசிடிவி காட்சிகளை வைத்து அந்த அடையாளம் தெரியாத நபரை கும்மிடிப்பூண்டி காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் கொள்ளையன் பயன்படுத்திய இருசக்கர வாகனம் சென்னையில் திருடு போனதாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட வாகனம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அர்னாப் கோஸ்வாமி மீது 1914 பக்கங்கள் குற்றப் பத்திரிகை தாக்கல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.