திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள சாலையோர சிறுகடை வியாபாரிகள், சுமை தூக்கும் தொழிலாளர்கள், வீட்டு வேலை செய்வோர், ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளிட்டோருக்கு அரசு நலவாரியம் அமைத்துத்தர வேண்டும், வேறு பல மாநிலங்களில் உள்ளது போல் தமிழ்நாட்டிலும் நலவாரிய பணப்பயன்களைக் கணிசமாக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியூ சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், 500க்கும் மேற்பட்ட சிஐடியூ மாநில மற்றும் மாவட்ட தொழிலாளர்கள் கலந்துகொண்டு தொழிலாளர் நல வாரிய அலுவலகம் வரை பேரணியாக சென்றனர்.