திருவள்ளூர் 23ஆவது வார்டு மேட்டுத்தெரு, 26ஆவது வார்டு காமராஜபுரம் பகுதிகளில் உள்ள கழிவுநீர் கால்வாய்களில் ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டு குப்பைகளால் கழிவு நீர் வெளியேற முடியாமல் தேங்கி நின்று கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று பரவும் அபாயம் உள்ளதாக திருவள்ளூர் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் வி.ஜி. ராஜேந்திரனுக்கு, அப்பகுதி மக்கள் புகார் அளித்த நிலையில் நேற்று அப்பகுதிகளில் நகராட்சி ஆணையர் சந்தானமும், எம்எல்ஏவும் ஆய்வுகளை மேற்கொண்டனர்.
அதனடிப்படையில் கழிவுநீர்க் கால்வாய்களை உடனடியாக சரி செய்யவும் கழிவுநீர் முறையாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறும் நகராட்சி ஆணையருக்கு எம்எல்ஏ உத்தரவிட்டார்.
அதைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் குடிநீரின்றி அவதிப்பட்டு வருவதாக தெரிவித்ததையடுத்து அப்பகுதி மக்களுக்கு தற்காலிகமாக தண்ணீர் டேங்குகள் வைத்து அதில் தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்குமாறும் நிரந்தரத் தீர்வாக அப்பகுதியில் போர்வெல் அமைக்க கேட்டுக்கொண்டார்.
அதேபோல் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டபோது நியாயவிலைக் கடைகளில் நாளை வழங்க உள்ள 14 பொருள்கள் கொண்ட மளிகை தொகுப்பு முறையாக பேக்கிங் செயல்படுகிறதா என ஆய்வு செய்து முறையாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் கடை ஊழியர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும் அப்பகுதியில் உள்ள மின் கம்பங்களை சரிசெய்ய மின்வாரியத்திற்கு பரிந்துரை செய்யப்படும் என பொதுமக்களும் தெரிவித்தார்.