திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அடுத்த சிருபுழல்பேட்டை ஊராட்சி புதுப்பேட்டை பகுதியில் இன்று(ஜன.20) மாதாந்திர சந்தை நடைபெற்றது. இப்பகுதி பெரும்பாலும் வடமாநிலத்தவர்கள் வாழும் பகுதியாகும்.
இந்நிலையில், இன்று (ஜன.20) நடைபெற்ற மலிவு விலை சந்தையில், தகுந்த இடைவெளி, முகக்கவசம் போன்ற தமிழ்நாடு அரசின் நிலையான கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றாமல் மக்கள் கூட்டம் அலை மோதியதால் கரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
நாளுக்கு நாள் கரோனா தொற்று பன்மடங்கு அதிகரித்து வரும் நிலையில், மக்களை நெறிமுறைப்படுத்த தவறிய ஊராட்சி மன்ற நிர்வாகத்தின் மீதும், காவல்துறை மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: 7 இடங்களில் அகழாய்வு: இனி இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாறு தமிழ் மண்ணிலிருந்தே...!