திருவள்ளூர்: திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை குடோனில் ஐந்து லாரிகளில் நெல் மூட்டைகள் இறக்குமதி செய்ய நேற்று (அக்டோபர் 7) கொண்டுவரப்பட்டது. இதில் மூன்று லாரிகள் இறக்குமதி செய்யப்பட்ட நிலையில் இரண்டு லாரிகளை மறித்த விவசாயிகள் சர்க்கரை ஆலை குடோனில் நெல் இறக்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இதையடுத்து ஆலை சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும், உடன்பாடு எட்டப்படாத நிலையில், பேச்சுவார்த்தையை இன்று (அக்டோபர் 8) காலை நடத்துவதாகக் கூறினர். இதனால் விவசாயிகள் கலைந்துசென்றனர்.
இது குறித்து தமிழ்நாடு கரும்பு விவசாய சங்க சர்க்கரை ஆலை மட்ட தலைவர் பெருமாள் கூறுகையில், “நவம்பரில் ஆலை திறக்கப் போராடிவரும் நிலையில், அரிசியை குடோனில் இறக்கிவைத்திருப்பது நியாயமற்ற செயல்.
இதைப் பற்றி கேட்டால், ஆட்சியரின் உத்தரவு என ஆலை நிர்வாக மேலாண்மை இயக்குநர் கூறுகிறார். அரவையை நவம்பரில் தொடங்காததற்கு இதுதான் காரணம் என விவசாயிகளுக்கு தோன்றுகிறது” என்றார்.
இதையும் படிங்க: மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை: 20-க்கும் மேற்பட்ட படகுகள் சேதம்