திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியக் கூட்டம் ஒன்றியக்குழுத் தலைவர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திருவள்ளூர் ஒன்றியத்தைச் சேர்ந்த கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர். தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய இக்கூட்டத்தில் தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு, அவை அனைத்தும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
மேலும் இந்தக் கூட்டத்தில் பேசிய ஈக்காடு ஒன்றிய கவுன்சிலர் சரத்பாபு, ”ஒன்றிய அலுவலக வளாகத்தில் முன்னாள் முதலமைச்சர்களான பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோரின் திருவுருவச் சிலைகளை அமைக்க வேண்டும், ஈக்காடு ஊராட்சியில் மோசமாக உள்ள சாலைகளைச் சீரமைத்தல், பயன்பாடற்று கிடக்கும் அம்மா பூங்காவினை இளைஞர்களின் நலன் கருதி மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும்” என கோரிக்கை விடுத்தார்.