திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடான திருத்தணி முருகன் கோயில் உள்ளது. இங்கு கந்த சஷ்டி விழாவினை முன்னிட்டு, மூலவர் பெருமாளுக்கு தங்க கவசமும், சிறப்பு அலங்காரமும் செய்து தீபாராதனை காட்டப்பட்டது.
பின்னர் புஷ்பாஞ்சலி நிகழ்ச்சிக்காக, பல்வேறு மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட மலர்களை வைத்து முருகப் பெருமானுக்கு அழகுப் படுத்தப்பட்டது.
இவ்விழாவில் ஆந்திரா, சென்னை, அரக்கோணம், திருவள்ளூர், திருத்தணி சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை வழிபட்டனர்.
இதையும் படிங்க: கடவுளை மூழ்கடித்த வெள்ளம்: அடித்துக் கொண்ட கிராம மக்கள்