கோவிட்-19 வைரஸ் தாக்கத்தால் உலக நாடுகள் மிகுந்த அச்சத்தில் இருந்து வரும் நிலையில் வரும் மார்ச் 31ஆம் தேதி வரை திரையரங்குகள், வணிக வளாகங்கள், பள்ளிகள், என பொதுமக்கள் அதிகம் புழங்கும் இடங்களை மூட வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் பூவிருந்தவல்லியில் இயங்கிவரும் தனியார் பள்ளிக்கு நேற்று வழக்கம்போல் மாணவர்கள் சென்றுள்ளனர்.
இதுகுறித்து பள்ளி நிர்வாகத்திடம் கேட்டபோது, விடுமுறை என்று அனைத்து மாணவர்களின் பெற்றோர்களுக்கும் எஸ்.எம்.எஸ் அனுப்பிவிட்டதாகவும், பத்தாம் வகுப்பு மாணவிகள் சிலர் பள்ளிக்கு வந்து விட்டதால் அவர்களை உடனடியாக அனுப்ப வேண்டாம் என பள்ளியில் இருக்க வைத்துவிட்டு பின்னர் அனுப்பியதாகக் கூறினர்.
இருப்பினும் தமிழ்நாடு அரசு பள்ளிகளை திறக்கக்கூடாது என உத்தரவிட்டும் பள்ளி இயங்கியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க... கரோனோவை கட்டுப்படுத்த சிறப்பு N95 முகக்கவசம் - சிறைக்கைதிகளை வைத்து தயாரிக்கிறது தமிழ்நாடு அரசு