ETV Bharat / state

Audio Leak: அலைபேசியில் ஆசிரியர் ஆபாசப் பேச்சு! - Studnt protest

பொன்னேரியில் கல்லூரி மாணவியிடம் தவறாகப் பேசிய உதவிப் பேராசிரியரை பணி நீக்கம் செய்ய வலியுறுத்தி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்கள் போராட்டம் காரணமாக மறுஅறிவிப்பு வரும் வரை கல்லூரியின் வகுப்புகள் ரத்து செய்யப்படுவதாக கல்லூரி முதல்வர் அறிவித்துள்ளார்.

அலைபேசியில் ஆசிரியர் ஆபாச பேச்சு!- வெளியான ஆடியோ!

author img

By

Published : Apr 9, 2022, 9:43 PM IST

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் ஆங்கிலத்துறை உதவிப்பேராசிரியர் மகேந்திரன் என்பவர் கல்லூரி மாணவி ஒருவரிடம் தவறான முறையில் செல்போனில் பேசி, நட்பாகப் பழக வீட்டுக்கு வருமாறு அழைப்பு விடுக்கும் ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனையடுத்து நேற்று உதவிப்பேராசிரியர் மகேந்திரனைக் கைது செய்து ஆபாசமாகப் பேசுதல், மிரட்டல் விடுத்தல், பெண்கள் வன்கொடுமை உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து பொன்னேரி கிளைச்சிறையில் காவலர்கள் அடைத்தனர். இந்த நிலையில் நேற்று வகுப்புகளைப் புறக்கணித்து மாணவர்கள் இந்திய மாணவர் சங்கத்தினருடன் இணைந்து கல்லூரி வாயிலின் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டது.

மாணவியிடம் தவறாகப் பேசிய உதவி பேராசிரியரைக் கைது செய்தால் மட்டும் போதாது, அவர் வேறு எந்த மாணவியிடமும் இது போன்ற செயல்களில் ஈடுபடாத வண்ணம் அவரைப் பணி நீக்கம் செய்ய வேண்டும் என முழக்கங்களை எழுப்பிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொன்னேரி காவல்துறை உதவிப்பேராசிரியர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாக மாணவர்களிடம் தெரிவித்தனர். எனினும், அவரைப் பணி நீக்கம் செய்ய வேண்டும் எனத்தொடர்ந்து வலியுறுத்தினர்.

காவல் துறைக்குக் கட்டுப்பட்ட கல்லூரி மாணவர்கள்:போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தாமல் போராடுமாறு காவல் துறையினர் அறிவுறுத்தியதைத் தொடர்ந்து சாலை மறியலைக் கைவிட்டு கல்லூரி வாயிலில் அமர்ந்து போராட்டத்தைத் தொடர்ந்தனர். கல்லூரியில் உதவிப்பேராசிரியர் மகேந்திரன் வகுப்பு நேரத்தில் மாணவ, மாணவிகள் முன்னிலையில் நடனமாடுவதாகவும், அப்போது புகார் தெரிவித்தனர்.

அலைபேசியில் ஆசிரியர் ஆபாச பேச்சு!- வெளியான ஆடியோ!

மாணவிகளைப் பேராசிரியர்களை நம்பி கல்லூரிக்கு அனுப்பும் நிலையில், மகேந்திரன் போன்றவர்களால் பெண்களைப் படிப்பதற்கு அனுப்பவே பெற்றோர் அச்சப்படுவதாக வேதனைத்தெரிவித்தனர். தொடர்ந்து மாணவர்களின் பிரதிநிதிகள் கல்லூரி நிர்வாகம், காவல்துறையிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

போராட்டத்தால் வகுப்புகள் ரத்து: இந்த சர்ச்சைக்குரிய பேராசிரியர் பணி செய்வது குறித்து கல்லூரி இயக்குநரகம் முடிவு செய்யும் எனக் கல்லூரி முதல்வர் அப்போது மாணவர்களிடம் தெரிவித்தார். மேலும் மாணவர்களிடம் ஒருமையில் பேசும் பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், வகுப்புகளை முறையாக நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்போது மாணவர்கள் வலியுறுத்தினர்.

கல்லூரி வளாகத்திற்குள் வேறு எந்த மாணவிக்கும் இதுபோன்ற பாதிப்பு ஏற்படாத வகையில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாணவர்கள் அப்போது கேட்டுக்கொண்டனர். இதனிடையே மாணவர்கள் சங்கத்தினருடன் இணைந்து போராட்டம் நடத்தியதால் கல்லூரிக்கு மறு அறிவிப்பு வரும் வரை வகுப்புகள் ரத்து செய்யப்படுவதாகக் கல்லூரி முதல்வர் சேகர் அறிவித்துள்ளார். மாணவர்கள் சாலை மறியல் போராட்டம் காரணமாகக் கல்லூரியில் பரபரப்பு நிலவி வருகிறது.

இதையும் படிங்க:கல்லூரி மாணவியிடம் செல்போனில் ஆபாசப் பேச்சு - கைது செய்யக்கோரி மாணவிகள் கலகக்குரல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.