திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த திருகண்டலம் கிராமத்தில் உள்ள செங்கல் சூளைகளில் பணியாற்றி வந்த வட மாநில தொழிலாளர்கள் ஊரடங்கால் வேலையின்றி தவித்து வந்தனர்.
இதையடுத்து கடந்த சில நாள்களாக வடமாநில தொழிலாளர்கள், சொந்த மாநிலத்திற்கு ரயில் மூலம் அனுப்பி வைக்கப்படுவதால், இவர்களும் தங்களது சொந்த மாநிலத்திற்கு செல்வதற்காக 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு நடந்து செல்ல புறப்பட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த பெரியபாளையம் காவல்துறையினர், அவர்களை நெய்வேலி கிராமத்தில் தடுத்தி நிறுத்தி, அனைத்து வடமாநில தொழிலாளர்களும், சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அதுவரை பொறுமையாக இருக்குமாறு அறிவுறுத்தினர்.
மேலும் மத்திய அரசிடம் விண்ணப்பித்து ரயில் சேவை கிடைத்த பிறகு சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று வருவாய்த்துறை அதிகாரிகள் கூறியதையடுத்து தொழிலாளர்கள் மீண்டும் செங்கல் சூளைக்கு திரும்பி சென்றனர்.
இதையும் படிங்க: பெண் ஊழியர்களுக்கு கரோனா: மூடப்பட்ட திருவேற்காடு நகராட்சி அலுவலகம்