ETV Bharat / state

‘காவலர்கள் மனசாட்சியுடன் பணியாற்ற வேண்டும்’ - காவல் இயக்குநர்

திருவள்ளூர்: பயிற்சி முடித்து பணியில் சேரும் காவலர்கள் மனசாட்சியுடன் பணியாற்ற வேண்டும் என கூடுதல் காவல் இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.

police
author img

By

Published : Jul 6, 2019, 8:46 AM IST

திருவள்ளூரை அடுத்த கனகவல்லிபுரத்தில் செயல்பட்டுவரும் காவலர் பயிற்சிப் பள்ளியில் கடந்த நான்கு மாதங்களாக 143 பேருக்கு காவல் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்நிலையில், இவர்களுக்கான பயிற்சி நிறைவடைந்ததையடுத்து நேற்று நிறைவு விழா நடைபெற்றது. இவ்விழாவில், குற்ற ஆவண காப்பக கூடுதல் இயக்குநர் வினித் தேவ் வான் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பயிற்சியின் போது சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

இதில் பயிற்சி முடித்த காவலர்கள் சிலம்பாட்டம், தேரோட்டம், ராட்டினம், கண்ணன் தேரோட்டம் உள்ளிட்ட பல்வேறு சாகச நிகழ்ச்சிகளை நடத்தி பார்வையாளர்களைக் கவர்ந்தனர். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த வினித் தேவ், ‘இதுபோன்ற அசத்தல் நிகழ்ச்சிகளை பார்க்கும்போது பழைய நினைவுகள் வருகிறது. மேலும் காவலர்கள் தங்களது பணியினை மனசாட்சியுடன் செய்ய வேண்டும்’ என்றார்.

காவலர் பயிற்சி நிறைவு விழா

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தில்லை நடராஜன் உள்ளிட்ட காவல்துறை அலுவலர்கள், பயிற்சி பெற்ற காவலர்களின் குடும்பத்தினர் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Intro:திருவள்ளூரில் காவலர் பயிற்சி நிறைவு விழாவில் காவலர்கள் பல்வேறு சாகச நிகழ்ச்சிகளை நடத்தி அசத்தல்...

Body:திருவள்ளூர் காவலர்கள் பயிற்சி நிறைவு விழாவில் காவலர்கள் பல்வேறு சாகச நிகழ்ச்சிகளை நடத்தி அசத்தும் செய்தார்கள் பயிற்சி முடித்து பணியில் சேரும் காவலர்கள் மனசாட்சிப்படி பணியாற்ற வேண்டும் என குற்ற ஆவண காப்பக கூடுதல் காவல் துறை இயக்குனர் வேண்டுகோள் விடுத்தார். திருவள்ளூரை அடுத்த கனகவல்லி புறத்தில் உள்ள காவலர் பயிற்சிப் பள்ளியில் காவலர் பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் குற்ற ஆவண காப்பக கூடுதல் காவல் துறை இயக்குனர் வினித் தேவ் வான் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பயிற்சியின் போது சிறப்பாக செயல்பட்ட காவலர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார் . கடந்த 7 மாதங்களுக்கு முன் தேர்வு செய்யப்பட்ட இந்த 143 பேரும் ஆவடியில் உள்ள பயிற்சி பள்ளியில் முதல் நான்கு மாதங்களும் அதனைத் தொடர்ந்து திருவள்ளூர் அடுத்த கனகவல்லி புரத்தில் உள்ள காவலர் பயிற்சி பள்ளிகளில் பயிற்சி அளிக்கப்பட்டது. அதை நிறைவு நாளான இன்று கடல் அலை சிலம்பாட்டம் தேரோட்டம் ராட்டினம் கண்ணன் தேரோட்டம் உள்ளிட்ட பல்வேறு சாகச நிகழ்ச்சிகளை நடத்தினார்கள். இது போன்ற அசத்தல் நிகழ்ச்சிகளை பார்க்கும் போது பழைய நினைவுகள் வந்ததாகவும் காவலர்கள் தனது பணியினை மனசாட்சியுடன் செய்ய வேண்டும் என்றும் குற்ற ஆவண காப்பக கூடுதல் காவல் துறை இயக்குனர் வினித் தேவ் செய்தியாளர்களிடம் பேசும்போது தெரிவித்தார் . இந்த நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தில்லை நடராஜன் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்தன் கங்காதரன் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் பயிற்சி பெற்ற காவலர்களின் குடும்பத்தார் என ஏராளமானோர் கலந்து கொண்டனர. பேட்டி வினித் தேவ் வான். குற்ற ஆவண காப்பக கூடுதல் காவல்துறை இயக்குனர்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.