திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை சத்தியவேடு கூட்டு சாலையில் உள்ள முள்புதரில் ஆண் உடல் ஒன்று கிடப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இந்தத் தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
45 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் அழுகிய நிலையில் இருந்தால் அவர் யார் என அடையாளம் காண்பதில் காவல் துறையினருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. சாலையோரம் உடல் கிடந்ததால் விபத்தில் இறந்திருக்கிறாரா இல்லை கொலையா என்ற கோணத்தில் காவலர்கள் விசாரித்துவருகின்றனர்.